ஜேர்மனியில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜேர்மனியின் Solingen இல் இடம்பெற்ற மூன்று கொலைகளுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் Solingen நகரில் நேற்று (24) கூரிய ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Solingen நகரின் 650வது ஆண்டு நிறைவைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு வந்த இனந்தெரியாத ஒருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் இருந்தவர்களை தாக்கிவிட்டு குற்றவாளி தப்பியோடியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பிரதான சந்தேக நபரும் கொலையுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.