நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் மரணம்

#Death #Accident #Bus #Nepal
Prasu
11 months ago
நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் மரணம்

நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியர்கள் 40 பேருடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த பஸ் பொக்ராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 

இதையடுத்து விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!