ஈராக் சென்ற யாத்ரீகர்கள் பஸ் விபத்து - 28 பேர் மரணம்
#Death
#Accident
#Bus
#Pilgrims
Prasu
11 months ago

பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி 50க்கும் மேற்பட்ட ஷியா யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மத்திய ஈரானில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் சுமார் 28 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 23 பேர் காயம் அடைந்தனர், அவர்களில் 14 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மத்திய ஈரானில் உள்ள யாஸ்டி மாகாணத்தில் இந்த விபத்து நடந்தது என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.



