37 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இந்தியர் விடுதலை
#Arrest
#Prison
#Bangladesh
#release
#Indian
Prasu
8 months ago

வங்கதேசத்தில் 37 ஆண்டுகளாக சிறையில் இருந்த இந்தியர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பினார்.
திரிபுராவை சேர்ந்த ஷாஜகான் என்பவர் 1988 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது மாமியார் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவரை கைது செய்தனர் 25 வயதில் கைது செய்யப்பட்ட அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
11 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்த பின்பும் வேறு வழக்கிலும் அவரை போலீசார் தொடர்புபடுத்தியதால் அவரது விடுதலை சாத்தியமில்லாமல் போனது.
இந்நிலையில், ஜாரா அறக்கட்டளையின் உதவியினால் 37 ஆண்டுகளுக்கு பின்பு இப்போது அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்திய எல்லையில் பாதுகாப்புப் படையினரிடம் ஷாஜகான் ஒப்படைக்கப்பட்டார்.



