இந்தியாவில் அடுத்தடுத்து பதிவாகிய இரு நிலநடுக்கங்கள்!
#India
#Earthquake
Mayoorikka
1 year ago

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று காலை 6.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏழு நிமிட இடைவெளியில் 4.9 மற்றும் 4.8 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்துள்ள நிலையில், இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.



