ரஷ்யாவில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு
#Earthquake
#Russia
Prasu
8 months ago

ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்ஸ்கிவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து கம்சட்ஸ்கியின் தலைநகர் பெட்ரோபாவ்லோவை ஒட்டிய எல்லையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
நிலடுக்கம் பூமியில் இருந்து 50 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்தது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கைக்கான கால அளவு கடந்துவிட்டது.



