6 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிர் பிழைத்த சிறுமி

#India #Girl #Building
Prasu
1 year ago
6 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிர் பிழைத்த சிறுமி

ரீல்ஸ் எடுக்கும்போது 6 -வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

இந்திய மாநிலமான உத்தரப்பிரதசம், காசியாபாத் நகரில் 11 -வது வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 6 -வது மாடிக்கு சென்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்துள்ளார்.

அப்போது அவரது கையில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்துள்ளது. அதனை பிடிக்க சிறுமி முயன்ற போது எதிர்பாராத விதமாக 6 -வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

அப்போது அந்த சிறுமி களிமண் நிறைந்த பூந்தொட்டி மேல் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். 

சிறுமியின் வலது காலில் எலும்பு முறிவும், தலையின் சிறிய அளவிலான காயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

உயரமான இடங்களில் சென்று ரீல்ஸ் எடுப்பதும், அதனால் சில விபரீத நிகழ்வுகளும் அதிகமாக நடந்து கொண்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!