திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் - விளக்கம் உள்ளே!

#Hindu #Temple #Buddha
Prasu
1 month ago
திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் - விளக்கம் உள்ளே!

திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் (புத்தகோயில்), என்றறிகிறோம் அவற்றை முதல் நான்கு பகுதிகளில் காண்போம்.

1. இந்து மத பின்னணி

2. புராண இதிகாச கதைகளையும்

3. இலக்கியங்களில் சான்றுகளையும்,

4. வரலாற்று கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும்

5. வெளிநாட்டு யாத்திரிகர்களின் பயன குறிப்புகளையும் ஆராய்ந்தோம்

6. அதன் மூலம் திருப்பதி மலை, பொட்டல்கா என்று யுவான்சாங்-ஆல் குறிப்பிடப்பட்டதையும்

7. அந்த பொட்டல்கா, புல்லி என்ற களப்பிற மன்னனின் பெயரால் புல்லிக்குன்றம், என்று அழைக்கப்படுவதையும் அகநானூறு பாடல்கள் மூலம் அறிந்தோம்.

அவை மூலம் நாம் இதுவரை அறிந்தது, ராமானுஜர் காலத்துக்கு முன் திருப்பதி ஒரு பெருமாள் கோயில் அல்ல என்பது மட்டுமன்றி அது ஒரு புத்தர் கோயிலாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் உண்டென்றும் ! ராமனுஜர்தான் ஆரம்பத்தில் பௌத்தமடாலயமாக இருந்த திருப்பதியை ஏன்தேர்ந்தெடுத்தார் என்றால் அப்போது சுங்கம் தவிர்த்த சோழன் என்று சொல்லப்படும் குலோத்துங்கன் தென்னிந்தியாவை ஆண்டு வந்தான்.

ராமானுஜர் முதலில் மாற்ற முயற்சி செய்தது திருச்சானூர் புத்த கோயிலைத்தான், ஆனால் அந்த கோயில் மலைக்கு கீழே சமதளமான இடத்தில் இருந்ததால் அதிகாரிகள் அதை சிவன் கோயிலாக மாற்ற முயன்று கொண்டிருந்தனர்.

சோழர்கள் காலத்தில் ஏன் இப்படி எல்லா புத்த கோயில்களையும் சிவன் கோயில் அல்லது விஷ்ணு கோயிலாக மாற்றினார்கள் என்றால். இரண்டு காரணங்கள் உண்டு முதல் காரணம், தன் தந்தை உயிருடன் இருந்தபோது, ராஜராஜன் ஈழத்துக்கு போர் செய்ய சென்றபோது அங்கே இருந்த பெரிய பெரிய புத்தர் கோயில்களை பார்த்து அதே போல சிவனுக்கு ஒரு பெரிய கோயில் கட்டவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதும்.

இரண்டாம் காரணம் ராஜராஜன் அரசன் ஆனபின் ஏற்பட்ட தனி சோகம் ஒன்று உண்டு! அதாவது ராஜராஜ சோழனுக்கு, 1,ராஜேந்திரசோழனும் 2,குந்தவையும் மட்டுமே இரண்டு பிள்ளைகள்என அறிந்துள்ளோம் ஆனால் உண்மையில் அவனுக்கு மூன்று பிள்ளைகள், இரண்டு மட்டும் என்பது உண்மையல்ல ராஜராஜ சோழனுக்கு சந்திரமல்லி என்ற பெயரில் மற்றுமொரு மகள் உண்டு அவள் ஒரு ஈழ நாட்டு பௌத்த இளவரசனை காதலித்தாள் (அந்தக்காலத்தில் தமிழ் பௌத்தமும் ஈழத்தில் இருந்தது)அந்த காதல் பிரச்சனையில், காதலன் எதிர்பாராமல் கொல்லப்பட, தந்தை ராஜராஜன் தான் அந்த கொலைக்கு காரணம் என்று ராஜராஜன் மேல் கோபம் கொண்டு தந்தையை பிரிந்த சந்திரமல்லி நாகப்பட்டினம் புத்தவிகாரத்தில் புத்த சந்நியாசியாக மாறி தனது பெயரை மாதேவடிகள் என்று மாற்றிகொண்டாள்.

சோழர்கள் புத்த மத அழிப்பு நடவடிக்கைக்கு இதுவும் ஒரு காரணமே! மேலே சொன்ன திருச்சானூர் கோயிலை வைணவ கோயிலாக மாற்றமுடியாத ராமானுஜர் அதற்கு அருகில் வேங்கடமலை மேலே உள்ள கோயிலை மாற்ற முயற்சி செய்து மாற்றியது தான் திருப்பதி கோயில்.

புத்தமதத்தில்விஷ்ணு சிலைபோல் இருக்கும்அவலோகிதீஸ்வரா புத்தசிலைகள் ஆயுதம் தரிக்காமல் இருக்கும் என்பதும், திருப்பதி விஷ்ணுவுக்கும் ஆயுதம் இல்லை என்பதை ராமானுஜரே ஒப்புகொண்டுள்ளார்என்பதையும் இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்!

திருப்பதி கோயிலில் உள்ள பொருள்களையும் புத்த மத வழிபாட்டு முறைகளையும் நோக்கினால், கீழ் கண்ட பொருள்களை நாம் புரிந்து கொள்ள முடியும்!

1. ராமானுஜர் தன் கடின முயற்சியில் தான் இதை ஒரு பெருமாள் கோயில் என்று நிறுவுகிறார்;ஆனால்ஏற்கனவே அது விஷ்ணு கோயில் அல்ல என்ற சர்ச்சை அப்போதே மக்களிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது!

2. தலையை மொட்டை அடித்துகொள்வது, பார்பனர் முறை அல்ல, இந்துமத முறையும் அல்ல, புத்த மதத்தில் தான் புனிதமானது இந்த முறைஆகும்.

3. குடுமி வைப்பது தான் பார்பனமுறை, இந்துமதத்தில், மொட்டியடிப்பது, விதவைகளுக்கும், ஒருவரை அவமானப்படுத்த செய்யப்படும் தண்டனை முறையும் ஆகும், அல்லது ஒருவரின் இறப்பின் துக்ககாரியத்தில் கடைபிடிக்கும் முறையே ஆகும்.

4. இன்னும் சொல்லவேண்டும் என்றால் விஷ்ணு புராணம் (பாகம்3, அதிகாரம்18, பாடல்கள் 53-100) சொல்வதுயாதெனில் ஒரு முண்டகனை (மொட்டைதலையனை) பாஷாண்டியை நேரில் பார்த்தாலோ, பேசினாலோ அடுத்த 7 பிறவிகளில் எத்தனை விதமான தண்டனைகள் கிடைக்கும் என்று விரிவாக சொல்கிறது!

5. திருப்பதி தவிர வேறு எந்த பெருமாள் கோயிலிலும் இன்றுவரை மொட்டை அடிக்கும் வேண்டுதல் முறை இல்லாமல் இருக்கிறது அதற்க்கு காரணம் என்ன..?

6. எந்த இந்து கோயில்களில் எல்லாம் மொட்டை அடிக்கும் வேண்டுதல் முறை உள்ளதோ அவை எல்லாம் முன்னாளில் ஜைன மற்றும் புத்த கோயில்களே ஆகும்! (அப்போ பழனி முருகன்.?)

7.திருப்பதி கோயில் மட்டுமே ஏகமூர்த்தி ஆதாவது விஷ்ணு தனியே மூல விக்கிரகமாக இருக்கும் கோயில், அவலோகிதீஸ்வரர் தான் தனியே இருப்பார்!

8.திருப்பதி கோயிலில் சயன மண்டபம் 18 அடி நீள அகலம் கொண்ட ஒரு சதுர மண்டபம். இந்த மண்டபம் வெளிப்புரம் இருந்து பார்த்தால் அந்த சுவர் ரொம்ப பழமையானதாகவும் உள்புறம் சென்று பார்த்தால் சற்று புதியதாகவும் இருக்கும், உண்மையில் பழைய சுவற்றில், உள்ள சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் மறைக்க உள்புறம் புதிய சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் எந்த சிற்பவேலைப்பாடுகளும் இருக்காது.

9. எல்லா கோயில்களிலும், கொடிமரம் மற்றும் பலிபீடம், உள்பிரகாரத்தில் தான் இருக்கும், ஆனால் திருப்பதி கோயிலில் மட்டும் கொடிமரம் மற்றும் பலிபீடம் வெளியே இருக்கும், ஏனெனில் மலை மேலே புத்த கோயிலில் உள்ளே கொடிமரம் மற்றும் பலிபீடம் வைக்க இடமும் இல்லை வசதியும் இல்லை!

10.இவையெல்லாம் போக இன்றும் திருப்பதி கோயிலில் உள்ள கடவுளை அந்த ஊர்மக்கள் மலையப்ப சாமி என்றுதான் அழைக்கிறார்கள், அது ஏன் என்று கேட்டால் எந்த வைணவ ஐயரோ..! ஐயங்காரோ..! பதில் சொல்லமாட்டார்கள்.

அந்த கடவுளுக்கு ஏன் மலையப்ப சாமி என்று பெயர் என்பதற்கு, இலங்கை மாஹாவம்சம் எனும்நூல் பதில் சொல்கிறது.இலங்கையில் புத்த துறவிகள், தாக்கப்பட்டபோது, அவர்கள் ரோகன மலையில் போய் ஒளிந்துகொள்கின்றனர், அவர்களை காப்பாற்ற குலசேகரன் என்ற ஒரு தமிழ் அரசன் தன் தளபதியான மலையப்பரை அனுப்புகிறான்.

மலையப்பர் அந்த புத்த துறவிகளுக்கு உதவியதோடு, பிறகாலத்தில்தானும் ஒரு புத்த துறவியாக மாறிவிடுகிறார். அவர் இறந்தபின், மன்னன் குலசேகரன் அவருக்கு தமிழ்நாட்டில் ஒரு மலையில் கோயில் கட்டுகிறான்.

(திருப்பதி அப்போது தமிழ்நாடாக இருந்தது! பின்னர் மரீனா பீச்சைவாங்கிக்கொண்டு திருப்பதியை ஆந்திராவுக்குத் தாரை வார்த்ததன் பின்பே தெலுங்குதேசத்திற்குரித்தானது!)அந்த தளபதியின் மீது கொண்ட அன்பால், அந்த கோயிலின், வாசல் படியில் தன்பெயரை பொறிக்கிறான்.

இன்றும் திருப்பதி கோயிலின் கடவுளின் பெயர் மலையப்பசாமி தான். அந்த கோயிலின் கர்ப்பகிருக வாயிலில் உள்ள படியின் பெயரும் குலசேகரன் படிதான். ஈழத்தமிழ் மன்னன் குலசேகரன் கட்டியபோயில்தான் திருப்பதி என்பதும்! பௌத்தமடாலயமாக இருந்ததால்தான் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சே முதற்கொண்டு பௌத்தர்கள் பலரும் திருப்பதிக்கு அடிக்கடி விஜயம் செய்கிறார்களா..? இந்தக்கேள்விகள் சில செய்திகளை வரலாற்று ரீதியாக உணர்த்தினாலும் . 

திருப்பதியில் உள்ள மூலவர் முருகன் என்றும் பழனியில் மொட்டை அதேதான் திருப்பதியிலும்மொட்டை ! குன்றுகளில் குடியிருப்பவன் குறிஞ்சிக்கடவுள் குமரன்தானே..? இடுப்பில் கைவைத்திருப்பவன் முருகனே என்றும் திருப்பதியில் மட்டுமே வெங்கடாஜலபதி இடுப்பில் கைவைத்துள்ளார் என்றும் நிறுவுவோரும் உண்டு !

அது தவிர அது சிவாலயம் என்றும் ஆரம்பத்தில் ஆலயமதிற்சுவர்களில் நந்திகளே இருந்தன பிற்காலத்தில் அவை நீக்கப்பட்டு ஆழ்வார்களின் சின்னங்கள் இணைக்கப்பட்டன என்றும் கூறுவோர் உண்டு! 

அரியும் சிவனும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு என்பதும் காதுகளில் கேட்க்கத்தான் செய்கிறது! அது தவிர சித்தார்த்தனாக இருந்த கௌதமபுத்தர் ஓர் இந்துவம்சாவழித்தோன்றலே ..!என்றும்,பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்துமதம் தோன்றிற்று அதனால் தான் இந்துக்கடவுள்களின் சிலைகள் புதைபொருட்களாக இன்றும் வெளிவந்து எதைக் காட்டிநிற்கிறது? இந்துமதம் சைவம், சாக்தம், வைஸ்ணவம், காணாபத்யம்,சௌரம், கௌமாரம் என ஆறு பிரிவுகளைக் கொண்டாலும் அனைவருமே ்அத்தனை தெய்வங்களையும் வழிபடும் மரபு ஆனது அனைவருக்கும் உண்டு என்பதால் கடவுள் உண்டென்றிரு அது ஒன்றென்றிரு ! என்ற தத்துவத்தில் அனைவரும் வணங்குதற்குரிய கடவுளாகா வெங்கடநாதனை கோவிந்தா கோவிந்தா என்று கைகூப்பி வணங்குவோம் மூலம் ஒன்று தான் முதலும் ஒன்றுதான்! 

புத்தனும், சித்தனும், பக்தனும்,எனக்கு ஒன்றுதான் எல்லாம் என்னுள் தோன்றி என்னுள் மறையும் என்ற ஆதிசக்தி தாயவளை மனதில் நிறுத்தி நீ எங்கள் சென்று எப்படி வழிபட்டாலும் அதை நிறைவேற்றுபவள் நான்தான் எனும் ஆதிமூலமான அம்மாவை நினைந்திடுவோமாக ..! ஓம் சக்தி ஆதிபராசக்தி..!!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!