தொழுகையின் போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலி

#Death #Attack #Israel #Mosque
Prasu
11 months ago
தொழுகையின் போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலி

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி மீது தாக்குதல்கள் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. 

கிழக்கு காசாவில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டடோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஜர் எனப்படும் பகல் நேர தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதலானது நடந்துள்ளது. 

கடந்த ஒரே வாரத்தில் 4 பள்ளிகள் மேல் மக்கள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி 2பள்ளிகளின் மேல் நடந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய நாள் தாக்குதலில் 17 பேர் பலியாகினர்.

அதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 2 அன்று மற்றொரு பள்ளி மீது நடந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்த பள்ளிகளில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஒளிந்திருப்பதாக கூறி இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நியாயப்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7 முதல் நடந்துவரும் தாக்குதல்களில் இதுவரை 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!