போர் களத்தில் ரோபோ நாய்களை பயன்படுத்தும் உக்ரைன்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இராணுவத்தில் கடுமையான ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் உக்ரைன், 'BAD One' என்ற ரோபோ நாயை உருவாக்கியுள்ளது.
இவை போர்க்களத்திலும், ராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், விரைவில் ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இராணுவக் கண்காணிப்பு மற்றும் கண்ணிவெடிகளைக் கண்டறியும் அதிக ஆபத்துள்ள நடவடிக்கைகளில் BAD One-கள் பயன்படுத்தப் போவதாக அறியப்படுகிறது.
Bad One ரோபோ நாயின் மேம்படுத்தப்பட்ட மொடலாக 'BAD Two' எனும் மற்றொரு ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அதன் மாதிரியைக் காட்ட முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.