பால்மாவின் விலையைக் குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல்!
#SriLanka
#Milk Powder
Mayoorikka
1 year ago

பால்மா இறக்குமதியாளர்களுடன் பால்மாவின் விலையைக் குறைப்பது தொடர்பில் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் நடத்தக்கூடும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ செவ்வாய்க்கிழமை (30) தெரிவித்துள்ளார்.
இதன்படி, பால்மாவின் விலையைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், விலையைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகார சபைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
நுகர்வோருக்குத் தேவையான சலுகைகளை வழங்குவதற்கு இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



