இஸ்ரேல் கால்பந்து மைதானத்தில் ஏவுகணை தாக்குதல் : குழந்தைகள் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலான் ஹைட்ஸ் கால்பந்து மைதானத்தில் ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் இறுதிக் கிரியைகள் ஹிஸ்புல்லா போராளிகளால் மேற்கொள்ளப்பட்டன.
அங்கு குழந்தைகள், இளைஞர்கள் என 12 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளைத் தாக்க இஸ்ரேலின் போர் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஹிஸ்புல்லா போராளிகளுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே போர் மூளும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, பெய்ரூட் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை இடைநிறுத்தவும் தாமதப்படுத்தவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் அதன் சில விமானங்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறுகிறது.



