பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த படகு விபத்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பிரான்சில் இருந்து இங்கிலாந்திற்கு புறப்பட்ட சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 34 பேர் மீட்கப்பட்டு அவசர சேவைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.பிரெஞ்சு கடலோர காவல்படையின் கூற்றுப்படி, கடலில் இன்னும் பல படகுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
UK புள்ளிவிவரங்களின்படி, ஜூலை 21 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 1,500 பேர் உலகின் பரபரப்பான கப்பல் பாதையை 27 படகுகளில் கடந்து சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



