ஊழல், தேர்தல் முறைகேடுகளுக்கு மத்தியில் வெனிசுலாவில் மீண்டும் தேர்தல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

ஊழல், தேர்தல் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வெனிசுலாவில் ஜனாதிபதித் தேர்தல் நேற்று (28.07) நடைபெற்றுள்ளது.
06 வருட காலத்திற்கு ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் போட்டியிடுகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸ் மரணமடைந்ததையடுத்து அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற நிக்கோலஸ் மதுரோ, இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
எவ்வாறாயினும், வெனிசுலாவில் 25 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ஐக்கிய சோசலிசக் கட்சிக்கு இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பலத்த சவாலாக அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



