சீனாவில் உலோக தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் மரணம்

#China #Death #Factory #Blast #Workers
Prasu
1 year ago
சீனாவில் உலோக தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் மரணம்

சீனாவின் ஹினன் மாகாணம் யங்க்சங் நகரில் தொழிற்பூங்கா உள்ளது. இந்த தொழிற்பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

இதனிடையே, இந்த தொழிற்பூங்காவில் உலோக தொழிற்சாலையும் உள்ளது. இதில் பலர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், உலோக தொழிற்சாலையில் நேற்று மாலை தொழிலாளர்கள் வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து காயமடைந்த 14 பேரை மீட்டனர். ஆனால் இந்த வெடிவிபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உலோக தொழிற்சாலையில் உள்ள எந்திரம் திடீரென வெடித்ததே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனாலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், உலோக தொழிற்சாலையின் உரிமையாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!