ஒலிம்பிக் ஆரம்பநாள் நிகழ்விற்கு வருகை தந்த முகமூடி மனிதர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பிரான்ஸில் நேற்றைய ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாளில் உலகம் முழுவதும் கேட்கப்பட்ட ஒரே கேள்வி, யார் அந்த முகமூடி மனிதர் என்பது தான்.
'வெள்ளை மற்றும் கறுப்பு' நிறங்களில் ஆடை அணிந்து, தலையை மூடியபடி ஒரு துணியும், முகத்தை மறைத்தும் ஒரு மர்மமான நபர் நிகழ்ச்சி முழுவதும் கலக்கினார்.
அவர் யார் குறித்து உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் பலவித கேள்விகளை எழுப்பியதோடு, யாராக இருக்கலாம் என பல சந்தேகங்களும் வெளியிட்டன.
ஆனால் இறுதி வரை அந்த திரை விலக்கப்படவில்லை. அவர் யார் எனவும், அவரது முகமும் காண்பிக்கப்படவில்லை.