லிபியாவில் 5 ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்ட இந்திய தூதரகம்
#India
#Embassy
#Reopen
#Libiya
Prasu
1 year ago
லிபியா நாட்டில் கிளர்ச்சியாளர்களின் போராட்டம், ராணுவத்தின் அடக்குமுறை தாக்குதல் என போர்க்களமாக காட்சி அளித்தது.
அங்கு சிக்கித் தவித்த 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பாதுகாப்பு பிரச்சனை காரணமாக லிபியாவில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தை கடந்த 2019-ம் ஆண்டில் இந்திய அரசு மூடியது.
இந்நிலையில், லிபியா தலைநகர் திரிபோலியில் மூடப்பட்ட இந்திய தூதரகம் 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
லிபியா குடிமக்களுக்கு விசா வழங்குதல் மற்றும் இந்திய வெளிநாட்டினருக்கான வேலை நிலைமைகளை சரிபார்த்தல் உள்ளிட்டவை இந்த தூதரகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.