இஸ்ரேலிய தலைநகரில் அமெரிக்க தூதரகம் முன் குண்டு வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு
#America
#world_news
#Israel
Mayoorikka
1 year ago

இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியில் அமெரிக்க தூதரகத்தின் கிளை அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேலிய அதிகாரிகள் ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். பல தூதரகங்கள் இராஜதந்திர அலுவலகங்கள் காணப்படும் பகுதியில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தில் 50 வயது நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
8 பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்க தூதரகத்தின் கிளை அலுவலகத்திற்கு 300 மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



