உத்தர பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் இருவர் உயிரிழப்பு
#Death
#Accident
#Train
Prasu
1 year ago
உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.
சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது.
இந்த விபத்தில் ரெயிலின் 4 ஏசி பெட்டிகள் உள்பட பல பெட்டிகள் கவிழ்ந்துள்ளது என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் தகவல் வெளியானது.
விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.