பிலிப்பைன்சில் பயணிகள் பஸ் விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி
#Death
#Accident
#Bus
#Phillipines
Prasu
1 year ago

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகரிக்கும் விதிமீறல்கள் மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்களால் சாலை விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இந்நிலையில், வடக்கு பிலிப்பைன்ஸில் பிக் அப் டிரக் மீது பயணிகள் பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து ககாயன் மாகாணத்தில் உள்ள அபுலுக் நகராட்சியில் உள்ள சந்திப்பில் நடந்துள்ளது.
இதுதொடர்பாக நடந்த விசாரணையில், பயணிகள் பஸ்சில் எந்த உயிரிழப்பும் இல்லை. பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் படுகாயம் அடைந்தனர். பயணிகளில் 23 பேர் காயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.



