உத்தரபிரதேசத்தில் பயணிகள் பேருந்து விபத்து - 18 பேர் பலி
#India
#Death
#Accident
#Bus
#Passenger
Prasu
1 year ago
வட இந்தியாவில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து ஒன்று பால் டிரக் மீது மோதியதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு எக்ஸ்பிரஸ்வேயில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வட மாநிலமான பீகாரில் இருந்து தலைநகர் புதுடெல்லி நோக்கி சென்றுக்கொண்டிருந்த பேருந்து பால் டிரக் உடன் நேரடியாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 18 பேர் பலியானதுடன், காயமடைந்த 19 பேரை அங்குள்ள வைத்தியசாலைக்கு பொதுமக்கள் அழைத்துச் சென்றதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.