கன்னி ராசியினருக்கு நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
கன்னி ராசியினருக்கு நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வழிபாட்டால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். மனதில் உண்டான குழப்பம் விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4: வெளியூர் பயணத்தில் சங்கடம் அதிகரிக்கும். கவனமாக செயல்படுவது நன்மையாகும். ரோகிணி: மனதில் உண்டான குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். மிருகசீரிடம் 1, 2: தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். பணியாளர்களால் சில நெருக்கடிகள் தோன்றும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3, 4: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வழிபாடு நன்மை தரும். திருவாதிரை: கவனமுடன் செயல்படுவீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள். புனர்பூசம் 1, 2, 3: எதிர்பார்ப்பில் இழுபறி ஏற்படும். குடும்பத்தினரால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். இடம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தீர்வு உண்டாகும். பூசம்: தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். ஆயில்யம்: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் குழப்பங்களும் தடையும் ஏற்படும். பூரம்: உங்கள் செல்வாக்கு வெளிப்படும். மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை நீங்கள் சாதிப்பீர்கள். உத்திரம் 1: பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழிலில் கவனம் தேவை. செலவிற்கேற்ற வருமானம் வரும்.

கன்னி

உத்திரம் 2, 3, 4: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். அஸ்தம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உங்கள் முயற்சி நிறைவேறும். சித்திரை 1, 2: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீண்டநாள் விருப்பம் இன்று நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3, 4: நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். முயற்சி வெற்றியாகும். சுவாதி: பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்த்த பணம் உங்களைத் தேடிவரும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். அனுஷம்: வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கேட்டை: திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

தனுசு

மூலம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்கள். பூராடம்: கவனமாக செயல்படுவீர்கள். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். உத்திராடம் 1: தடைகளைத் தாண்டி திட்டமிட்ட செயலை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஆதாயம் காண்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2, 3, 4: எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். வெளியூர் பயணத்தால் உடல் சோர்வடையும். திருவோணம்: உங்கள் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அவிட்டம் 1, 2: செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் அதற்கேற்ற வருமானம் வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.

கும்பம்

அவிட்டம் 3, 4: குடும்பத்திற்குள் சில சங்கடங்கள் தோன்றும். உறவுகள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் போவார்கள். சதயம்: பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பூரட்டாதி 1, 2, 3: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும்.

மீனம்

பூரட்டாதி 4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். உத்திரட்டாதி: முயற்சி வெற்றியாகும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். ரேவதி: தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வருவாய் அதிகரிக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!