மூட நம்பிக்கையால் பறிபோன சிசுவின் உயிர்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
மூட நம்பிக்கையால் பறிபோன சிசுவின் உயிர்!

தமிழகத்தில்  மூட நம்பிக்கையின் காரணமாக பிறந்த குழந்தையை கொலை செய்த முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது எனக் கருதி குறித்த கொலை குற்றத்தை செய்துள்ளார். 

குழந்தை பிறந்தவுடன் அக் குழந்தைக்கு ஜாதகம் பார்த்ததாகவும், அவர் குழந்தை பிறந்த நேரம் அசுபமானது எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அது குறித்த முதியவரின் உயிரிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என ஜோசியர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து குறித்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த முதியவர், பின்னர் நீர்தாங்கியில் குழந்தையை இட்டு கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஜெயம்கொண்டான் காவல்துறையினர் முதியவரை கைது செய்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!