கன்னி ராசியினர் கவனமாக செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 months ago
கன்னி ராசியினர் கவனமாக செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.பரணி: நினைப்பதை சாதிக்கும் நாள். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வரவு திருப்தி தரும்.கார்த்திகை 1: நெருக்கடி நீங்கும்நாள். உங்களை விமர்சித்தவர்களே உங்களைத்தேடி வருவர். செல்வாக்கு உயரும்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சிக்கு சூழ்நிலை சாதகமாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். உங்களுக்கு தொல்லை அளித்தவர் விலகுவர்.மிருகசீரிடம் 1,2: அலைச்சல் உண்டானாலும் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: துணிச்சலுடன் செயல்படுவீர். அந்நியர் உதவியால் உங்கள் வேலை நிறைவேறும்.திருவாதிரை: உங்களுக்கு எதிர்பார்த்த தகவல் வீடு தேடி வரும். பயணங்கள் சாதகமாகும்.புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். நெருக்கடி நீங்கும்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் முயற்சி லாபமாகும். தடைபட்டிருந்த வருவாய் வரும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூசம்: பணவரவில் இருந்த தடை விலகும். செயலில் லாபம் அதிகரிக்கும். வழக்கில் வெற்றி உண்டாகும்.ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். லாபமான நாள்.

சிம்மம்

மகம்: செயல்களில் குழப்பம் தோன்றும். தேவையற்ற பிரச்னை உண்டாகும். அமைதி காப்பது நன்மையாகும்.பூரம்: முயற்சி இழுபறியாகும் என்பதால் புதிய வேலைகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.உத்திரம் 1: உங்கள் வேலைகளில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். 

கன்னி

உத்திரம் 2,3,4: செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும். திடீர் செலவு தோன்றும். வரவு செலவில் கவனம் தேவை.அஸ்தம்: நன்மையான நாள். உழைப்பிற்கேற்ற வருமானம் உண்டாகும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். சித்திரை 1,2: இழுபறியாக இருந்த பிரச்னையில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள். 

துலாம்

சித்திரை 3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர். தொழில் வியாபாரத்தில் எண்ணம் நிறைவேறும்.சுவாதி: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். வருமானம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நெருக்கடி விலகும். நண்பர் உதவியால் லாபம் உண்டாகும். 

விருச்சிகம்

விசாகம் 4: பணிபுரியும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.அனுஷம்: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர். வருவாயில் இருந்த தடை விலகும்.கேட்டை: உங்கள் முன்னேற்றத்தை தடுக்க முயன்றவர் ஆச்சரியப்படும் வகையில் உயர்வடைவீர்கள். 

தனுசு

மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர். வியாபாரத்தில் லாபம் காண்பீர். 

மகரம்

உத்திராடம் 2,3,4: நீங்கள் எதிர்பாராத சங்கடம் தோன்றும். பணவரவில் தடை உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும்.திருவோணம்: பணவரவில் தடை ஏற்பட்டாலும் அதை சமாளித்து நினைத்ததை அடைவீர். உழைப்பு அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நண்பர்களால் சில சங்கடம் உண்டாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள். 

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். தொழில் போட்டியாளர்களால் உண்டான சங்கடம் நீங்கும்.சதயம்: தொழிலில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வியாபாரத்தில் போட்டியாளராக இருந்தவர் விலகிச்செல்வர். வருமானம் அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.

மீனம்

பூரட்டாதி 4: மறைமுகத் தொல்லை விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபமாகும். உடல்நிலை சீராகும்.ரேவதி: தொழிலில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீண்டநாள் பிரச்னைக்கு இன்று முடிவு காண்பீர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!