மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த 5 வயது குழந்தை

#SriLanka #Jaffna #Death #Hospital #Girl
Prasu
1 year ago
மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த 5 வயது குழந்தை

காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் வழியிலேயே உயிரிழந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த 05 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார். சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி காய்ச்சல் காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இன்று உடல் நிலை மோசமாகவே பெற்றோர் சிறுமியை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு சென்ற போதே அவர் உயிரிழந்தார்.

 உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது பிரேத பரிசோதனைக்கு பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!