உலக வங்கியின் முக்கிய அதிகாரி ஒருவரை சந்தித்த இராஜாங்க அமைச்சர்!
#SriLanka
#World Bank
Mayoorikka
1 year ago

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோருக்கு இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வொசிங்டன் டிசியில் இடம்பெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றின் தலைமையிலான வருடாந்த வட்டமேசை மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நிதித்துறை, தனியார் முதலீடு உள்ளிட்ட சகல துறைகளுக்குமான மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான சீர்திருத்தங்கள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது



