ரிஷப ராசிக்காரர்களே உங்கள் குணம், தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் இப்படித்தான் இருக்கும்

#spiritual
Mayoorikka
2 weeks ago
ரிஷப  ராசிக்காரர்களே உங்கள் குணம், தொழில், வாழ்க்கை, பொருளாதாரம் இப்படித்தான் இருக்கும்

பன்னிரெண்டு ராசிகளில் இரண்டாவதாக உள்ள ரிஷப ராசி, பெண் ராசியாகும். இது நீருக்குரிய ராசியாகும். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவர். ரிஷப ராசியில் கிருத்திகை 2, 3, 4 ஆம் பாதங்களும், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்களும் அடங்கியுள்ளன. 

ராசிகளில், ரிஷப ராசி ஸ்திர ராசியாகும். குருவுக்கு அடுத்தபடியாக முழு சுப கிரகம் சுக்கிரன் ஆகும். சகல கலைகளுக்கும் அழகுக்கும் அதிபதியான சுக்கிரன் இந்த ராசியின் அதிபதியாக வருவதால், இந்த ராசிக்காரர்கள் முக அழகுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். 

ரிஷப ராசி ஒரு பெண் ராசியாகும். இது நீரின் தத்துவத்தை கொண்டதாகையால் சீதள சுபாவம் இருக்கும். ரிஷப ராசிக்கு கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும். மற்றவை பகை ராசிகளாகும். ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தும் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். 

இவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்கள் மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள். இவர்களுக்கு நீண்ட கழுத்தும், அகன்ற மார்பும், விரிந்த தோள்களும், அழகான அங்க அமைப்புகளும் இருக்கும். இவர்களின் கண்களுக்கு தனி அழகுண்டு. 

பற்கள் வரிசையாகவும் அழகாகவும் இருக்கும். குட்டையான விரிந்த மூக்கும் அழகான அடர்ந்த முடியும் இருக்கும். இவர்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் புகழ், கௌரவம், அந்தஸ்து யாவும் அமையும் இவர்கள் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக இருப்பார்கள். இவர்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலைத் தரும். பொதுக் காரியங்களிலும் இவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். அதேபோல், எந்த ஒரு பொது விஷயத்திலும் வந்தோம் போனோம் என்று இல்லாமல், எல்லா வேலைகளையும் முன் நின்று செய்வார்கள். 

எந்த விஷயத்திலும் தனக்கென காரியம் சாதிக்க நினைப்பது இவர்களுக்கு பிடிக்காது. உடன் இருப்பவர்களுடன் சேர்ந்து முன்னேறுவதே முன்னேற்றம் என்பது இவர்களின் சித்தாந்தமாக இருக்கும். ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள். 

மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள விரும்புவார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் இவர்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதை பற்றி எல்லாம் இவர்கள் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அன்பு செலுத்திக் கொண்டே இருப்பார்கள். அந்த அன்பை தனது துணையிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கக் கூடியவர்கள்.

 தனது துணை தன் மீது அன்பு செலுத்துகிறாரா, இல்லையா என்றெல்லாம் இவர்கள் கவலைபட மாட்டார்கள். ஆனால் அவர்கள் அன்பு செலுத்திக் கொண்டே இருப்பார்கள். ரிஷப ராசி பெண்கள் மிகவும் வலிமையானவர்களாகவும், மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருப்பார்கள். தாங்கள் அன்பு வைத்திருப்பவர்களுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள்.

 தங்களின் கணவர் மற்றும் குழந்தைகள் மீது அதீத அன்பு செலுத்தக் கூடியவர்கள்

 காதல் திருமணம் 

 அன்பு காட்டுவதில் இவர்கள் மிஞ்ச ஆள் கிடையாது. ஒருவர் மீது நம்பிக்கை வைத்து, அவரை காதலித்து விட்டால் அவர்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்க தயங்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் மனதில் இடம்பிடித்து, இவர்களின் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஒருவரின் காதலை ஏற்றுக் கொள்வதற்கு முன் நன்மை - தீமைகள் பற்றி ஆயிரம் முறை யோசிப்பார்கள். 

images/content-image/2024/04/1713230654.jpg

அவர்கள் சரியான முடிவை தான் எடுத்திருக்கிறார்கள் என அவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை வரும் வரை அந்த காரியத்தில் இறங்க மாட்டார்கள். ஒருவரை காதலிக்க துவங்கி விட்டால் தங்களை பற்றி ரகசியங்களை வாழ்க்கையின் தனிப்பட்ட விஷயங்களை நம்பி சொல்லுவார். ரிஷப ராசிக்கார பெண்கள் நேசிப்பதற்கும், அக்கறை காட்டுவதற்கும் சரியான துணை அமைந்து விட்டால் இவர்கள் வாழ்க்கை வசந்தமாக இருக்கும். இவர்களின் வாழ்க்கைத் துணை இவர்களைவிட வேகமாக இருப்பார். 

தொழில்

நிர்வாகத் திறமையில் அதீத திறமையுடன் திகழ்வார். அதேநேரம், சில விஷயங்களில் இவர்களை புரிந்து கொள்ளாமல் வாக்குவாதங்கள் செய்வார். அவர் எதைச் செய்தாலும் இவர்களின் நன்மைக்காகவே இருக்கும். இவர்கள் சிறு வயதில் தகுந்த அனுபவம் இல்லாமல் சில தொழில்களில் ஈடுபட்டு, நஷ்டத்தை அடைவார்கள். 

ஆனாலும் அதன் மூலம் கிடைத்த அனுபவம் இவர்களுக்கு உதவியாக இருக்கும். இவர்களின் நாற்பது வயதுக்கு மேல் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். ரிஷப ராசி பூமியை குறிப்பதாகும். எனவே கன்னி மற்றும் மகர ராசிகள் இவர்களின் குணங்களுடன் ஒத்துப் போகும். அதே போல் மற்ற ரிஷப ராசிக்காரர்களுடனும் இவர்களின் பொருத்தம் நன்றாக இருக்கும். 

தண்ணீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்கார்களுடன் ரிஷப ராசி பெண்களின் பொருத்தம் சிறப்பாக இருக்கும். ரிஷபமும் விருச்சிகமும் நேர் எதிரானவை. நெருப்பு மற்றும் காற்று ராசிகளுடன் ரிஷப ராசி பெண்கள் தங்களின் உறவை உறுதியுடனும், எச்சரிக்கையுடனும் கொண்டு செல்ல வேண்டும். ரிஷப ராசிக்கு மிகவும் சவாலான பொருத்தம் என்றால் அது சிம்மம் மற்றும் கும்ப ராசியாக தான் இருக்கும்.

 ரிஷப ராசியில் பிறந்த பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் மிக அரிதாகவே மற்றவர்களின் உதவியை நாடுவார்கள். மிக அரிதாக தான் நண்பர்களின் உதவியை கூட தேடுவார்கள்.

 அதே சமயத்தில், தங்களின் உணர்ச்சிகளை எவ்வாறு மறைப்பது, மற்றவர்கள் அதிருப்தி அடையும் வகையில் அதை வெளிப்படுத்தாமல் இருப்பது என நன்கு அறிந்து வைத்திருக்கக் கூடியவர்கள் ரிஷப ராசிக்கார பெண்கள். ரிஷப ராசிக்கார பெண்கள் பெரும்பாலும் அதிக பொறுப்பான வேலைகளை தேர்வு செய்யாமல் தவிர்த்து விடுவார்கள்.

 இதனால் வேலை தொடர்பான மனஅழுத்தத்தை தவிர்க்கலாம் என நினைக்கக் கூடியவர்கள். வாழ்க்கையை எளிமையாகவும், எளிதாகவும் வாழ வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள் ரிஷப ராசி பெண்கள் மிகவும் நம்பிக்கையானர்கள். 

வாழ்க்கையை யதார்த்தமாக அணுகக் கூடியவர்கள். எதையும் நேர்மையாக கையாளக் கூடியவர்கள்.வேலையிலும் இதை முறையாக பின்பற்றக் கூடியவர்கள். இன்டீரியர் டெக்கரேஷன், நிதி, அக்கவுண்டிங், மார்க்கெடிங், நர்சிங், இன்ஜினியரிங், சட்டம், பொது மக்களுடன் தொடர்புடைய துறைகள், உயர் கல்வி ஆகிய துறைகள் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

 ரிஷப ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம்

 ரிஷபம் என்பது நந்தியை குறிப்பதால், பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் ஈசனை தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், இவர்களின் வாழ்க்கை வளம் பெறும். நந்தியெம்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்த திருவையாறு திருத்தலத்துக்கு ஒருமுறை சென்று அருள்மிகு ஐயாறப்பரையும் அறம்வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்து, வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் சகல இன்னல்களும் நீங்கும். அதேபோன்று தொழிலில் பின்னடைவு, குடும்பத்தில் பிரச்னை, வேலையில் சச்சரவுகள் என்று மனதுக்கு வருத்தம் ஏற்படுத்தும் சுழல்கள் ஏற்பட்டால் பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப்பழம் கொடுத்து வாருங்கள். பிரச்னைகள் விலகும். உங்கள் வாழ்க்கையில் சகல இன்னல்களும் நீங்கும்.