வாகன விபத்தால் புலத்சிங்கல ஹல்வத்துர பிரதேசத்தில் பதற்றம்!

#SriLanka #Accident #sri lanka tamil news #Tamil News
Dhushanthini K
1 year ago
வாகன விபத்தால் புலத்சிங்கல ஹல்வத்துர பிரதேசத்தில் பதற்றம்!

வாகன விபத்து காரணமாக புலத்சிங்கல ஹல்வத்துர பிரதேசத்தில் நேற்று (05) இரவு பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இரவு 8.30 மணியளவில் புலத்சிங்கள ஹல்வத்துர பகுதியில் இங்கிரியில் இருந்து புலத்சிங்கள நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் மோதியுள்ளார். 

 குறித்த நபர் இடமாற்றம் செய்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர். பொலிசார் தலையிட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் புலத்சிங்கள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

 ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!