IPL - டெல்லி அணி படுந்தோல்வி

#Delhi #IPL #T20 #Cricket #Kolkatta #2024
Prasu
8 months ago
IPL - டெல்லி அணி படுந்தோல்வி

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இதன்படி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். 

இதில் பிலிப் சால்ட் 18 ரன்களில் அவுட்டானதை தொடர்ந்து அடுத்து வந்த ரகுவன்ஷியுடன் சுனில் நரேன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அரைசதத்தை கடந்து அசத்திய நிலையில், ரகுவன்ஷி 54 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சுனில் நரேன் 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

அரைசதத்தை நோக்கி முன்னேறிய ஆண்ட்ரே ரசல், 41 ரன்களில் போல்ட் ஆனார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களிலும், ரிங்கு சிங் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. 

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த 2-வது அணி என்ற வரலாற்று சாதனையை கொல்கத்தா படைத்துள்ளது. தொடர்ந்து 273 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கியது.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். இதில் பிரித்வி ஷா 10 ரன்களிலும், டேவிட் வார்னர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் மற்றும் அபிஷேக் போரல் ஆகிய இருவரும் ரன் ஏதுமின்றி அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். 

அரைசதம் கடந்த கேப்டன் ரிஷப் பண்ட், 55 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக டெல்லி அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இந்த சீசனில் கொல்கத்தா அணி தனது முதல் 2 ஆட்டங்களில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தியதைத் தொடர்ந்து இன்று டெல்லி அணியை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!