முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியில் விபத்து : இளைஞர் ஒருவர் படுகாயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியில் விபத்து : இளைஞர் ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு - வள்ளிபுனம் பகுதியிலுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மீது  மோட்டார் சைக்கிள் மற்றும் பிறிதொரு முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த விபத்து சம்பவம் இன்று (21.03) இடம்பெற்றுள்ளது. 

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து உடையார்கட்டு பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வள்ளிபுனம் பாடசாலைக்கு முன்பாக திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முந்தி செல்ல முற்பட்டுள்ளது. 

இதன்போது குறித்த மோட்டார் வண்டி மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன தொடராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியுடன் மோதியுள்ளன. 

இதில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் இரண்டு முச்சக்கர வண்டியையும், மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4