ஜப்பானிய தூதுவர் மற்றும் அனுரகுமார திஸாநாயக்க இடையே சந்திப்பு

#SriLanka #China #Meeting #AnuraKumaraDissanayake #Ambassador
Prasu
1 year ago
ஜப்பானிய தூதுவர் மற்றும் அனுரகுமார திஸாநாயக்க இடையே சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் திரு.மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஜப்பானிய தூதரகத்தின் பிரதித் தலைவர் திரு. கட்சுகி கொட்டாரோ (Katsuki Kotaro) மற்றும் இரண்டாவது செயலாளர் திருமதி இமாய் கௌரி (Imai Kaori) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் இரு தரப்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. 

images/content-imagemeta/2023/2023/1710835445.jpg

சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு ஜப்பானிய இராஜதந்திர பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டதுடன், ஜப்பான் பிரதிநிதிகள் இலங்கையில் தொடர்ந்தும் முதலீடு செய்வதற்கு ஜப்பானின் தயார்நிலையை வலியுறுத்தினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!