பூவரசங்குளத்தில் பேருந்தில் சிக்குண்டு ஒருவர் உயிரிழப்பு: சாரதி கைது
#SriLanka
#Accident
Mayoorikka
1 year ago

வவுனியா பூவரசங்குளத்தில் பேருந்தில் ஏற முற்பட்டவரை பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார்பேருந்து பூவரசங்குளம் தரிப்பிடத்தில் தரித்து நின்ற போது அதில் ஏற முற்பட்ட ஒருவர் பேருந்தில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பேரூந்தின் சாரதியினையும் கைது செய்தனர்.
இவ் விபத்தில் பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடயை முதியவரே உயிரிழந்தவராவர்



