அம்பலாங்கொடை பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

#SriLanka #Police #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
அம்பலாங்கொடை பகுதியில் இரு பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கடமை தவறிய குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் இருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.  

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியான 'சமன் கொல்ல' என்பவரின் வீட்டில் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், இது தொடர்பில் பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் குறித்த செய்தி  தொடர்பில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் தெரிவிக்கவில்லை.  

அப்போது அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி இயக்குனராகவும் கணனி செயற்பாட்டாளராகவும் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!