மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள சுகாதார ஊழியர்கள்!
#SriLanka
#Health
#strike
#Health Department
Mayoorikka
1 year ago

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க நிதியமைச்சு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.



