எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியர்கள் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, காங்கேசன்துறை பகுதியில் வைத்து நேற்று (9) இரவு குறித்த மீனவர்கள் கைது சயெ்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இது சம்பந்தமான மேலதிக நடவடிக்கைகளை நீரியல்வள திணைக்களத்தினர் மேற்கொள்வார்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.