பெரும் போராட்டத்திற்கு மத்தியில் வெடுக்குநாறி மலைக்கு வழிபாட்டிற்கு அனுமதி!

சிவராத்திரி தினமான இன்றையதினம் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை நிகழ்த்துவதற்கு பொலிஸார் மக்களின் பெரும் போராட்டத்திற்கு பின்னர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இன்று காலை அங்கு சென்ற ஆலய நிர்வாகத்தினர், கிராம மக்கள், வெளியிடங்களிலிருந்து வருகைதந்த பக்தர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் வேலன்சுவாமிகள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மனிதவுரிமைகள் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் எனப் பலர் மேற்கொண்ட அழுத்தங்களால், வெடுக்குநாரிமலை ஆதிசிவனிடத்தில் சிவராத்திரி விழாவைச் செய்ய அனுமதித்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட கோயில் பூசகர் உள்ளிட்டவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



