யாழில் இதே நாளில் 33 வருடங்களுக்கு முன் நடந்தது என்ன?

#SriLanka #Jaffna #Attack #War #Old
Prasu
2 months ago
யாழில் இதே நாளில் 33 வருடங்களுக்கு முன் நடந்தது என்ன?

1991 ஆம் ஆண்டு இதே நாள் (06 பங்குனி 1991) யாழ்ப்பாண எங்கும் செறிவாக விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன.

யாழ்ப்பாணநகர்,கொக்குவில்,கலட்டி,கோம்பையன்மணல்,அச்சுவேலி,நெல்லியடி,கோண்டாவில் என பல பகுதிகளில் நடத்தப்பட்ட உக்கிரமான விமான தாக்குதலில் 3 பேர் உயிர் இழந்து இருந்தனர் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து இருந்தனர். 

இதற்கு முதல் நாள் (05 பங்குனி 1991) நடந்த விமான தாக்குதலில் மட்டும் 23 பேர் கொல்லப்பட்டனர். 

குறிப்பாக சுன்னாகத்தில் 5 பேரும் கோண்டாவிலில் 9 பேரும் பலியாகி இருந்தனர் . அதே போல அரியாலையில் 3 பேரும் தொண்டைமானாற்றில் 5 பேரும் பலியாகினர் 33 ஆண்டுகள் உருண்டோடி விட்டன .

பாதிக்கப்பட்ட எவருக்கும் நீதி வழங்கப்படவில்லை. மாறாக அதே பகுதியில் மாணவர்களை அழைத்து வந்து விமானப்படையினர் கண்காட்சி நடத்துகின்றார்கள்.

  Aeronautical தொடர்பில் அடிப்படை விடயங்கள் மாணவர்களுக்கு சில விடயங்கள் போதிக்கப்பட்டு இருந்தால் அதை உண்மையில் எங்கள் மாணவர்களுக்கு வாய்ப்பானது என்பதை மறுக்க முடியாது.

 அதே நேரம் 33 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் அதே மண் மீது உக்கிரமாக மேற்படி தரப்புகள் நடத்திய கொடூரங்களையும் அதற்கு நீதி வழங்க வில்லை என்பதையும் நினைவில் வைத்து இருக்க வேண்டும்