இரு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட தகராறு: சரமாரியாக தாக்கப்பட்டு ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் நேற்றைய தினம் இரவு 9 மணி அளவில் இரு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக ஐவர் பாதிக்கப்பட்டுள்ள்ளனர்.
குறித்த தாக்குதலில் மிளகாய் தூள் கொண்டு வீசப்பட்டு சரமாரியாக தாக்கப்பட்டுள்ளதுடன், வாள்வெட்டு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து அதில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூன்று பேரை கைது கைது செய்துள்ளனர்.
ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் ஐ விமல் தெரிவித்துள்ளார்.