நாட்டிற்கு வந்ததைந்தார் ஈரானின் வெளிவிவகார அமைச்சர்!
#SriLanka
#Minister
#Iran
#Visit
Mayoorikka
1 year ago

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக திங்கட்கிழமை (19) இரவு ஈரான் அரசாங்கத்திற்கு சொந்தமான ஐ.ஆர்.ஏ.என் 05 என்ற விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவருடன் தூதுக்குழுவாக நாட்டின் 20 உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்கள் திங்கட்கிழமை(19) முதல் புதன்கிழமை (21) வரை நாட்டிற்கு விஜயம் செமேற்கொண்டுள்ளனர்.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் மற்றும் குழுவினரை வரவேற்க வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



