மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து கல்வி செய்திட்டம் விரைவில் ஆரம்பம்: கல்வி அமைச்சர்
#SriLanka
#Susil Premajayantha
#Digital
#Ministry of Education
#education
Mayoorikka
1 year ago

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் திட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதத்தில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆதரவு அளிக்கிறது என்றார்.



