ஆண்களின் தலைமுடியை எவ்வாறு ஆரோக்கயமாக பேணி அனைவரையும் கவரலாம்.

#Health #Healthy #Hair
ஆண்களின் தலைமுடியை எவ்வாறு ஆரோக்கயமாக பேணி அனைவரையும் கவரலாம்.

முடிக்கு உபயோகப்படுத்தக்கூடிய இரசாயனங்களான ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் எண்ணெய் போல பல காரணத்தினாலும், சரியான நேரம் கொடுக்க முடியாத நிலையில் உணவு பழக்கம் பாஸ்ட் ஃபுட் நோக்கி சென்று இருக்கிறார்கள்.

இதனால் தலையில் பொடுகு பிரச்சனைகள் அதிகமா தலை தூக்க ஆரம்பிச்சிருக்கும். முக்கியமா ஆண்கள் மோட்டார் சைக்கிளில் போகும்போது தலைமயிர் கெடுதலை சந்திக்கிறார்கள். 

இது அவரகள் பாவிக்கும் தலைக்கவசத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.  இப்படி பல பிரச்சனைகளால நம்ம முடி எப்படி ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். 

அதனால் மயிர் வளர்ச்சி எப்படி சாத்தியமாகும்? ஆண்களுக்கு உபயோகப்படுத்தும் பல முக்கியமான மயிர் வளரச்சிக்கான ஆரோக்கிய முறைகளைக் காணலாம்.

உணவு

முதலாவதாக உணவு. உங்களோட தலை முடியை வலிமையாக்க மற்றும் தடிப்பாக்குவதற்கு நீங்கள் எண்ணெயில் பொரித்த உணவையும் அதிகமா இனிப்பு கலந்த பண்டங்களை சாப்பிடுவதை குறைக்க வேண்டும். மேலும் புகைக்கும் பழக்கம் இருந்தால் தலை முடியின் வலிமை குறைந்துவிடும்.

ஷாம்பு 

 உங்களின் மண்டை தன்மையைப் பற்றி தெரியாமல் நீங்க எவ்வளவு விலை உள்ள ஷாம்பு கண்டிஷனர் பயன்படுத்தினாலும் எல்லாமே வீண் தான்.

 இப்போது நீங்கள் மண்டைத்தன்மை வகை எப்படி தீர்மானிக்கலாம் என்றால்... தூங்குவதற்கு முன்னர்உங்க தலையை ஷாம்பு போட்டு கழவிக்கொண்டு தூங்கி எழும்பி ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து உங்க தலை முடியில் அதனை வைத்து தேய்த்துப் பாருங்கள்.

அது முழுவதும் எண்ணையா இருந்தா உங்களின் மண்டை  எண்ணெய் வாய்ந்தது. முன்னார் முடிக்கு வெறும் எண்ணைய் மட்டும் தேய்த்து இப்போது பவுடர் வரை தலைக்கு வர ஆரம்பித்திருக்கிறது. இதை தவறாக நினைத்து எல்லாரும் தலை முதல் எல்லாவற்றையும் மண்டையோடு வரைக்கும் இருக்கிறது. இதற்கு ஹேர்வாலிமிஷின் பவுடர் பாவித்தால் நன்றாக இருக்கும் .

 ஹெல்மெட் 

தலைக்கவசம் அணிந்து செல்கின்றவர்கள் இதனால் மயிர் ரொம்ப கொட்டலாம். இதில் இருந்து முடி உதிர்கின்ற பிரச்சனை தடுக்க முடியும். நீளத்தை குறைக்கலாம் இல்லா விட்டால் தலைக்கவசத்தினைச் சுற்றி இருக்கக்கூடிய பாக்டீரியாக்களினால் உங்கள் தலையில் பொடுகு அல்லது ஒவ்வாமை ஏற்படலாம். 

இதைத் தடுப்பதற்கு டெட்டால் மற்றும் நீர் கலந்து உங்ககளின் தலைக்கவசத்தை ஸ்பிரே பண்ணிக்கொள்ளலாம். அதன்பின்னரை சூரிய வெளிச்சத்தில் கொஞ்ச நேரம் விட்டு எப்பவுமே தலைக்கவசம் அணிய முன் கர்ச்சீப் வச்சு தலையை மூடிக்கொள்ள வேண்டும். பின்னர் தலைக்கவசம் அணியலாம். 

முடி வெட்டுதலும் பாராமரிப்பும்

முடிக்கு வளர்ச்சி அதிகமாக இருந்தால் 5-7 வாரத்தில் முடியை வெட்டலாம். மெதுவாக இருந்தால் 10 - 11 வாரத்தில் வெட்டலாம். அடிக்கடி முடி வெட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தலைமயிருக்கு உபயோகிக்க வல்ல நல்ல முடி லோசன்கள் மற்றும் பல தயாரிப்புகளை உங்கள் முடிக்கேற்றாற் போல் பயன்படுத்தினால் முடியும் வளரும் உங்கள் அறிவும் வளரும்.