பாடசாலைகளுக்கு இன்று மூன்றாம் தவணை விடுமுறை!
#SriLanka
#School
#Ministry of Education
#education
#School Student
Mayoorikka
1 year ago

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் கல்வியாண்டுக்கான 03 ஆம் தவணை கற்றல் செயற்பாடுகள் இன்று நிறைவடைகின்றன.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2024 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



