சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை முன்னெடுக்கமுடியாவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படலாம்! மத்திய வங்கி

சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை முன்னெடுக்கமுடியாத நிலையேற்பட்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உலகப்பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளிற்கு மத்தியில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவருகின்றது என தெரிவித்துள்ள இலங்கை மத்திய வங்கி சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் தடம்புரண்டால் பெரும்பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறுஏற்பட்டால் வளர்ச்சிபாதிக்கப்பட்டமை, நம்பிக்கையின்மை முதலீட்டாளர்களின் எதிர்மறை உணர்வுகள் காரணமாக பெரும் பொருளாதார இழப்புகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளது பொருளாதார நடவடிக்கைகள் மீட்டெடுக்கப்படுகின்றன எனினும் குறுகிய காலத்திற்கு வளர்ச்சி குறைவானதாகவே காணப்படும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



