ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவது தொடர்பில் சந்திரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு!
#SriLanka
#Chandrika Kumaratunga
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்க தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



