அஸ்வெசும திட்டம் : புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #Aswesuma
Dhushanthini K
1 year ago
அஸ்வெசும திட்டம் : புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்!

அஸ்வசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15.02) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  

ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.  

இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 4 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகவும்,  விண்ணப்பத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் ஆன்லைன் முறையின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

 கூடுதலாக, பிரதேச செயலகங்களில் உள்ள சிறப்பு பிரிவுகளுக்கும் வழங்கலாம் எனத் தெரிவித்த அவர், ஒரு மாதத்திற்கு விண்ணப்பங்களை கோருவோம் எனவும் கூறியுள்ளார். 

முதல் சுற்றில்  20 லட்சத்துக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது சுற்றில் 24 இலட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

ஜூலை மாதம் அவர்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!