(Breaking) இன்று மாலை யாழ்ப்பாணத்தினை உலுக்கிய கோர விபத்து: 6 மாத குழந்தை மற்றும் தந்தை உயிரிழப்பு! (இரண்டாம் இணைப்பு )

யாழ்ப்பாணம் - இணுவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று (14.02) இடம்பெற்ற வாகன விபத்தில் 06 மாத குழந்தை உள்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த நால்வரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணித்த புகையிரதத்தில் ஹயஸ் ரக வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயம் அடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(இரண்டாம் இணைப்பு )
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் மோதி வானொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



