அரச மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு : முன்னேற்றம் எதுவும் இல்லை என சுட்டிக்காட்டு!
#SriLanka
#Hospital
#drugs
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் முந்நூறு வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இது நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளின் தலைமையில் அடிக்கடி கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மருந்துப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
245 வகையான மருந்துகளுக்கு பதிவு செய்யப்பட்ட சப்ளையர்கள் இல்லை, பதிவு செய்த மருந்துகளுக்குஅதிகபட்ச சில்லறை விலை அறிவிக்கப்படாததால், மருந்துக் கழகம் டெண்டர் விடுவதை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



