இலங்கையில் சிறைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
#SriLanka
#Arrest
#Police
#Crime
#Prison
#prisoner
Mayoorikka
1 year ago

நாளாந்தம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளாந்தம் சுமார் 400 பேர் சிறைகளுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிர்வகித்து கைதிகளை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதுவரையில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.



