மிதுன ராசியினருக்கு கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
5 months ago
மிதுன ராசியினருக்கு கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: எதிர்பார்த்த தகவல் இன்று வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பரணி: வருமானத்தில் இருந்த தடை விலகும். உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும். பணம் வரும். கார்த்திகை 1: எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை சீராகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ரோகிணி: குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். விருப்பம் நிறைவேறும். இழுபறியாக இருந்த செயல் முடியும். மிருகசீரிடம் 1,2: விலகிச் சென்றவர் மீண்டும் தேடி வருவர். தொழிலை விருத்தி செய்வது பற்றி முடிவெடுப்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி சாதிப்பீர். மற்றவர் உதவி உங்கள் உறுதுணையாக இருக்கும். திருவாதிரை: பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றம் தரும். புனர்பூசம் 1,2,3: வியாபார நெருக்கடி நீங்கும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்றைய சங்கடம் விலகும். வரவேண்டிய பணம் வரும். பூசம்: வெளி வட்டாரத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செயல்களில் கவனம் அவசியம். ஆயில்யம்: நினைத்ததை அடைவீர். விழிப்புடன் செயல்படுவதால் சங்கடம் விலகும்.

சிம்மம்

மகம்: உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பூரம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். உத்திரம் 1: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும். முயற்சி ஒன்றை ஒத்தி வைப்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: ஆரோக்யத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். முயற்சி இன்று பலிக்கும். எதிரி விலகிச்செல்வர். அஸ்தம்: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் அகலும். சித்திரை 1,2: மறைமுக எதிரிகளைக் கண்டுபிடித்து விரட்டியடிப்பீர். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.

துலாம்

சித்திரை 3,4: நேற்றைய முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சுவாதி: செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர். உங்கள் பொறுப்பு கூடும். பிரச்னை முடிவிற்கு வரும். விசாகம் 1,2,3: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். முயற்சியில் வெற்றி பெறுவீர்.

விருச்சிகம்

விசாகம் 4: அலைச்சல் அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் காண்பீர். தொழில் நிலையில் திருப்தி ஏற்படும். அனுஷம்: வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். கேட்டை: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பொதுவாழ்வில் செல்வாக்கு உயரும்.

தனுசு

மூலம்: குடும்பத்தில் சில பிரச்னை தோன்றி மறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தோன்றும். பூராடம்: சேவையில் ஈடுபட்டவர்களின் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். நிதிநிலை உயரும். உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். சகோதரர் உங்கள் முயற்சிக்கு துணையாக இருப்பார்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நெருக்கடி குறையும். திருவோணம்: தடைப்பட்டிருந்த வருவாய் மீண்டும் வரத்தொடங்கும். உங்கள் செயல் எளிதாக நிறைவேறும். அவிட்டம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் செயல்களில் குழப்பம் உண்டாகும். முயற்சி இழுபறியாகும். வரவு செலவில் கவனம் செலுத்துவது நல்லது. சதயம்: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பீர். அலைச்சல் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். விழிப்புடன் செயல்பட்டு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும். கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்திரட்டாதி: உங்கள் செயல் இழுபறியாகும். வியாபாரத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். ரேவதி: இன்று எதிர்பாராத செலவு தோன்றி நெருக்கடிக்கு ஆளாவீர். உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர்.