கன்னி ராசியினருக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
கன்னி ராசியினருக்கு முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள் - ராசிபலன்
மேஷ ராசிக்காரர்களே
  • காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக் கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். 
  • இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார் கள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். 
  • முருகப்பெருமானை வழிபடு வது நன்று. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
  • கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷப ராசிக்காரர்களே

  • தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாயாரின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. 
  • குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். 
  • சிவபெருமானை வழிபடுவது சிறப்பு. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளிடமிருந்து எதிர் பார்த்த தகவல் கிடைக்கும்.
  • ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்,

மிதுன ராசிக்காரர்களே

  • புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை கேட்பதை வாங்கித் தந்து மகிழ்விப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். 
  • சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசி யம். இன்று விநாயகரை வழிபடுவது நற்பலன்களை அதிகரிக்கும்.
  • மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடக ராசிக்காரர்களே

  • மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். 
  • ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். 
  • மகாவிஷ்ணுவை வழிபடுவது நன்று. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
  • ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

சிம்ம ராசிக்காரர்களே

  • தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவி களும் கிடைக்கும். 
  • தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அரசுப்பணியில் இருப்பவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் தவிர்ப்பது அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். 
  • அம்பிகையை வழிபடுவது நன்று. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
  • பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படக்கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

கன்னி ராசிக்காரர்களே

  • சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். 
  • பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. 
  • விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.
  • அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

துலா ராசிக்காரர்களே

  • திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். நரசிம்மர் வழிபாடு சிறப்பு.
  • சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

விருச்சிக ராசிக்காரர்களே

  • காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். 
  • கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். 
  • முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.
  • அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மறைமுக இடையூறுகள் ஏற்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

தனுசு ராசிக்காரர்களே

  • மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூல மாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரி யங்களில் அனுகூலம் உண்டாகும். 
  • வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிப் பது உற்சாகம் தரும். பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. 
  • ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் கூடுதலாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.
  • பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மகர ராசிக்காரர்களே

  • சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். 
  • புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம். எதிரி கள் வகையில் எச்சரிக்கை தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். 
  • வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பதுடன் செலவுகளும் அதிகரிக்கும். பைரவர் வழிபாடு நன்று. உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
  • திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

கும்ப ராசிக்காரர்களே

  • புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சில ருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 
  • கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிற்பகலுக்கு மேல் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபடுவது நன்று.
  • அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
  • பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் காரியம் அனுகூலமாகும்.

மீன ராசிக்காரர்களே

  • மன உறுதியுடன் செயல்படுவீர்கள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். 
  • பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கி யத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். 
  • தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.
  • உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.